இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : 11. தேனீ தின்னும் பச்சைக் குருவி

 

 

தேனீக்களைத் தின்று வாழ்வதெற்கென்றே ஒர் பறவையைப் படைத்திருக்கிறான் ஆண்டவன்.  அதுதான் தேனீ தின்னும் பச்சைக் குருவி.  இதன் வண்ணத்தைப் பார்த்து சிலர் இப் பறவையை கிளியின் குஞ்சோ என்று எண்ணிவிடக் கூடும்.  ஆனால் இதன் அலகும் கம்பிபோல் நீண்டிருக்கும் வால் சிறகுகளின் நடு சிறகும் இது கிளிக் குஞ்சல்ல என்பதைக் காட்டி விடும்.  

 

 

Image:Green Bee-eaters (Merops orientalis) at Sindhrot near Vadodara, Gujrat Pix 098.jpg

 

(http://en.wikipedia.org/wiki/Image:Green_Bee eaters_(Merops_orientalis)_at_Sindhrot_near_Vadodara%2C_Gujrat_Pix_098.jpg)

 

 

இந்தக் குருவி கிராமப் புரங்களில் தந்தி, மின் கம்பிகளின் மீதோ, வேலிக் கம்பிகளின் மீதோ அல்லது செடிகளின் ஒரு உயர்ந்த கிளையின் மீதோ உட்கார்ந்திருக்கும்.  திடீரென அது சிறு தூரம் பறந்து சென்று பின் திரும்பி வந்து முதலில் உடகார்ந்திருந்த இடத்திற்கே வந்து சேரும்.  அப்போது பார்த்தால் அதன் அலகில் ஒரு தேனீ இருக்கும்.  தலையை சற்றே தூக்கி இரண்டு மூன்று விழுங்கலில் தேனீயைத் தின்னும்.

ராம பாணம் குறி தப்பாது என்பார்கள்.  வல்லரசுகள் படைத்த ஏவு கணைகள் கூட சில சமயம் குறி தப்பலாம்.  ஆனால் தேனீத் தின்னியின் குறி ஒரு நாளும் தப்பாது. 

 

Text Box:

 

 

 

 

 

 

 

பல தேனீக்களை உட்கொண்ட கொஞ்ச  நேரத்துக்குப் பின் தேனீத் தின்னும் குருவி அதன் வாயினால் சுமார் ஒரு சென்டிமீடர் நீளம் உள்ள நீண்ட கோழி முட்டை வடிவிலான ஒரு கருப்புக் கட்டியை வெளியே துப்பும். அதில் அப் பறவையால் ஜீரணிக்க முடியாத தேனீயின் இறக்கை, கால்கள் மற்றும் உடல் கூடு இவை இருக்கும்.

 

ß வாய் வழியே என்ன வரப் போகிறது?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தேனீத்தின்னி கூடுகட்டி வாழ்வது மண் திட்டுகளில் எலி வளை போன்று செய்த வங்குகளில்.  கூட்டில் குஞ்சுகள் இருந்தால் ஒவ்வொரு முறையும் தேனீயைப் பிடித்ததும் வளைக்குள் சென்று மறைவதைப் பார்க்கலாம்.

 

 

Text Box:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ß வானவில் தேனீத் தின்னி

(http://en.wikipedia.org/wiki/Image:Rainbowbeeeater.jpg)

 

வானவில் தேனீத் தின்னியின் (Rainbow Bee eater) வால் சிறகுகளின் நடு இறகு ஊசிபோல் நீண்டு இருப்பதைப் பாருங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

இயற்கையின் எழிலில்தான் இறைவன் நாம் பார்த்து ரசிப்பதற்கு  எத்தனை காட்சிகளை அளித்துள்ளான்!  

                                  

                                                                                                                                                                   நடராஜன் கல்பட்டு