அழியவிருக்கும்
ஒரு பறவையைக்
காப்பாற்ற (2) ஆரம்ப
முயற்சிகள்
மனிதன்-வனம்-விலங்குகள்
இவைகளுக்கு
இடையேயான
தொடர்பு பற்றிய
செய்தி
மக்களுக்குக்கும்
இளைஞர்களுக்கும்
போய்ச்
சேருவதற்காக
ஒத்த
கருத்துடைய சிலரும்
நானுமாகச்
சேர்ந்து
திருச்சி
வனவிலகுப்
பாதுகாபுச்
சங்கம் என்ற
ஒரு அமைப்பை
1975ல்
துவக்கினோம்.
மனிதன்-வனம்-விலங்குகள்
இவைகளுக்கு
இடையேயான
தொடர்பு பற்றிய
செய்தி
மக்களுக்குக்கும்
இளைஞர்களுக்கும்
போய்ச்
சேருவதற்காக
ஒத்த
கருத்துடைய சிலரும்
நானுமாகச்
சேர்ந்து
திருச்சி
வனவிலகுப்
பாதுகாபுச்
சங்கம் என்ற
ஒரு அமைப்பை
1975ல்
துவக்கினோம்.
![]()
பொதுக்
கூட்டங்களில்
பேசுவது,
திருச்சி மற்றும்
அதன்
சுற்றுப்
புறங்களில்
உள்ள கல்லூரிகளிலும்
பொது
இடங்களிலும்
மரங்கள் நடுதல்,
அதற்குத்
தேவையான மரக்
கன்றுகளை
உண்டாக்குவது,
கோடியக்கரையில்
குறைந்து
வரும்
வெளிமானின் (அதான்
சல்மான்
கொன்ற வகை
மான்)
எண்ணிக்கையைக்
கணக்கெடுத்தல்,
கல்லூரி
மாணவர்கள் இடையே
ஆர்வம்
உண்டாக்க
வனவிலங்குகள்
பற்றிய வினாடி
வினா
நிகழ்ச்சிகள்
நடத்துதல்,
புகைப் படக்
கண் காட்சி
நடத்துதல்
போன்றவையே
சங்கத்தின்
நடவடிக்கைகள்.
திருச்சியில்
உள்ள
கல்லூரிகளில்
சில சங்கத்துடன்
இணைந்து
செயல் பட்டு
நூற்றுக் கணக்கான
மரங்களை
நட்டு
வளர்த்தனர்.
திருச்சி
வனவிலங்குப்
பாதுகாப்பு
சங்கத்தின்
காரியதரிசி
ஜில்லா
கவுன்சிலில்
கௌரவ அங்கத்தினராக
சேர்த்துக்
கொள்ளப்
பட்டார்.
அங்கத்தினர்கள்
படித்து
மகிழ்வதற்காக
மரங்கள்,
விலங்குகள்,
பறவைகள்
பற்றிய
புத்தகங்கள்
கொண்ட நூல்
நிலயம்
அமைக்கப்
பட்டது.
திருச்சி
சங்கம் செயல்
பட்ட
விதத்தினை
மெச்சி தமிழக
அரசு சங்கம்
கேட்காமலேயே
இரண்டாண்டுகளுக்கு
மானியமாக
ரூபாய்
ஆறாயிரம் வழங்கியது.
சங்கம்
நடத்திய பல
வேலைகளில்
முக்கியமானதொன்று
கோடியக்
கரையில்
வெளிமான் (Black buck) கணக்கெடுப்பு.
சுமார்
இருபது
கல்லூரி
மாணவர்கள்
அடங்கிய குழு
கோடியக்
கரையின்
பரந்த திறந்த
புல் வெளிகளில்
சுதந்திரமாகச்
சுற்றித்
திரியும்
வெளிமாங்களின்
எண்ணிக்கையைக்
கணக்கெடுத்தது.
initialjobs_files/image011.jpg)
வெளி
மான் (Black buck – Scientific name: Antelope cervicapra)
மனதுக்கு
நிறைவு தரும்
வேலைகள்
நடந்தன.
பரவ நினைத்த
செய்திகள்
பலரையும் சென்றடைந்தது.
நடராஜன்
கல்பட்டு
தொடரும்.