அழியவிருக்கும் ஒரு பறவையைக் காப்பாற்ற (7) தையல்காரக் குருவி

 

அறுபதுகளில் எனது தாய் தந்தையர் கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் குடியிருந்தனர்.  பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு பன்னீர்ப் பூ மரம் இருந்தது.  அம்மரத்தின் பெரிய இலைகளில் ஒன்றினை அழகாகத் தைத்து தனது கூட்டினை அமைத்திருந்தது ஒரு தையல்காரக் குருவி.

 

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தபின் தாயும் தந்தையும் மாறி மாறி சிறு புழு பூச்சிகளைக் கொண்டுவந்து குஞ்சுகளுக்குக் கொடுத்து வந்தன.  அந்தக் காட்சியை பெங்களுரிலிருந்து விடுமுறையில் வந்திருந்த நான் புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். 

Text Box:

அதனைக் கண்ட ஒரு காகம் கூட்டருகே வந்து சேர்ந்தது.  காகத்தினால் குஞ்சுகளின் உயிருக்கு நிச்சயமாக ஆபத்து என்று எனக்குத் தோன்றியதால் ஒரு கல்லை எடுத்து காகத்தை நோக்கி வீசினேன்.  கல்லைக் கண்ட காகம் பறந்து சென்றது.  ஆனால் மறு கணமே அது மீண்டும் வந்தது.  இரண்டு மூன்று முறை விரட்டிப் பார்த்துப் பிரயோசனம் இல்லாது போகவே உண்டி வில்லால் காகத்தை அடித்து விறட்டினேன்.  கல்லடிபட்ட காகமும் அங்கிருந்து பறந்து சென்றது.  அன்று தையல்காரக் குருவியின் குஞ்சுகளைக் காப்பாற்ற முடிந்ததே தவிற அடுத்த சில நாட்களுள் நான் கவனிக்காத போது அந்தக் காகம் குஞ்சுகளைத் தின்றுவிட்டது.

 

Image:House Crow.jpg

 

சில மாதங்களுக்குப் பின் மீண்டும் சென்னைக்கு விடுமுறையில் வந்த என்னை ஒரு காகம் விரட்டி விரட்டித் தாக்கியது.  பின் வருடங்கள் ஓடினாலும் அந்தக் காகம் மட்டும் என்னைத் தாக்குவதை நிறுத்தவே இல்லை.  காகத்திற்கு தான் எத்தனை ஞாபக சக்தியோ!

 

                                                                                                                                                     நடராஜன் கல்பட்டு

 

 

                                                           (காகத்தின் படம் விகிபீடியா இணய தளத்திலிருந்து)